தாஜுதீன் கொலை – DIG அனுரவின் விளக்கமறியல் நீடிப்பு

றகர் வீரர் வஸீம்  தாஜுதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி சுமத் குமாரவிற்கு கருத்து தெரிவிப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

அது தொடர்பில் மீண்டும் சிந்தித்து பார்க்குமாறு நீதிமன்றம் சுமத் குமாரவிற்கு அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விருப்பத்தின் பிரகாரம் முன்வந்தால் நாளை விசேட கருத்தை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமென கொழும்பு மேலதிக நீதவான் சந்தேநபருக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.