தாஜுதீன் கொலை – DIG அனுர குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார்

முன்னாள் ரக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ்அதிபர் அநுர சேனாநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவர் தொடர்பான அடுத்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்போது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த மே 23ம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.

அத்துடன் நாரஹென்பிட்டி முன்னாள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரியும் இந்த கொலைதொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.