தாஜூதீன் கொலையாளிகளை கைது செய்து தன்னை விடுவிக்குமாறு கோருகிறார் அநுர…

ரக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க இம்மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று(16) கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டிரொக்ஷி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சாட்சியாளர் கூட்டிலிருந்த முன்னாள் காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க நீதிபதியிடம் “…தான் சுமார் 10 மாதங்களாக சிறையில் இருக்கின்றேன், இதனால் உடல் மற்றும் உள ரீதியாக அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளேன்.

தாஜுதீன் கொலையின் சாட்சியங்களை மறைத்ததற்காக சந்தேகத்தின் பேரில் என்னை கைது செய்தார்கள். ஆனால், என்னைப் போன்றே கைது சந்தேகத்தின் பேரில் கைது செய்தோருக்கு பிணை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கௌரவமிக்க நீதிமன்றில் நானும் கோருவது தாஜுதீன் கொலைகாரர்களை கண்டுபிடித்து தன்னை விடுதலை செய்யுங்கள்…” என தெரிவித்துள்ளார்.

 

(rizmira)