தாஜூதீன் கொலையில் கைதாகியிருந்த நாரஹென்பிட்டி OIC இற்கு பிணை…

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாரஹென்பிட்டி காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பிணை மற்றும் தலா 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரின் வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.