கொழும்பு தாஜ் சமுத்திரா என்று அழைக்கப்படும் TAL லங்கா பீ.எல்.சீ இன் இரண்டாவது பெரிய பங்காளரான த இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பனி லிமிடெட் தனது உரிமைத்துவத்தை விற்பனை செய்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இடம் பெற்ற இக்கொடுக்கல் – வாங்கலின் போது TAL லங்கா பீ.எல்.சீ இன் 34,375,640 பங்கு கள் ஒவ்வொன்றும் 25 ரூபா வீதம் IHOCO BV என்ற நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இது நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்புக்களில் 24.62 வீதமாகும். இந்த கொடுக்கல் – வாங்கலின் மொத்தப் பெறுமதி 859.39மில்லியன் ரூபாவாகும்.