தாதிமாரது போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது…

அரசாங்க மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் தாதிமாரது விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் இன்று(14) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம், நாடு தழுவிய ரீதியில் நேற்று(13) இந்த போராட்டத்தை ஆரம்பித்தது.

எனினும் இந்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில், குறித்த போராட்டம் நேற்றுடன் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் முறுதெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

(rizmira)