06 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(11) எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது.
இன்று நண்பகல் 12 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சு வரை குறித்த இந்த பேரணி முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எஸ்.ஜீ மெதிவத்த கூறினார்.
இதேவேளை அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை(12) நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமம் தெரிவித்துள்ளது.