(FASTNEWS|COLOMBO) – தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை(08) அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.