கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தாதியர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தாதியர் வேலை நிறுத்தம் காரணமாக வைத்தியசாலைகளின் நிலைமை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுசித் செனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், தாதியர்கள் அவசர சேவைகள் பிரிவிலிருந்து விலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை(02) ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.