தாதியியல் ஊழியர்கள் கைவிரல் அடையாளம் முறை தொடர்பில் பேச்சுவார்த்தை…

ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதியியல் ஊழியர்கள் கைவிரல் அடையாளத்திற்கு எதிராக போராட்டத்தினை மேற்கொண்டுள்ள தொழிற்சங்கம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் நிர்வாகத்துறையினருக்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பேச்சுவார்த்தையில் தீர்வு பெறப்படவில்லை என்றால் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலை நிறுத்த போராட்டத்திம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.