தான்சானியாவில் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயரிழப்பு…

தான்சானியா நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரில் உள்ள வீடுகளிலும், சாலைகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கடும் மழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் வீடுகளின் மேற்கூரையில் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மே மாதம் வரை டார் ஏஸ் சலாம் பகுதியில் கடும் மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.