தான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் போன்றன இடம்பெறவில்லை

யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க யுத்தக் குற்ற விசாரணையை வரவேற்பதாக, இலங்கையில் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் போன்றன இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.