“தான் எந்தத் தவறும் செய்யவில்லை” விஜயதாச கூற, நீதியமைச்சரின் கூற்றில் உண்மையில்லை.. – ஹர்ஷ கருத்து..

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் தலைமையில் இன்று(17) இடம்பெற்றது. இன்று(17) முற்பகல் 10.30 அளவில் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகி 12.10 அளவில் முடிவடைந்துள்ளது.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்,மோசடி வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற குறித்த இந்த கூட்டத்தில் பதிலளித்த விஜேதாச ராஜபக்ஷ தான் எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்த தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் நீதியமைச்சரின் கூற்றை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். கூறியுள்ளார்.

மேலும், அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை முடிவுக்கு கொண்டு வரும் வரை தான் ஓயப் போவதில்லை என கூறவில்லை எனவும் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)