அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தம்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் தாம் அமைச்சுப் பதவியில் இருந்து விலக மாட்டேன் எனவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படமாட்டார் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் சம்பவம் தொடர்பில தம்மீது குற்றம் சுமத்துவதற்கு சிறியளவேனும் காரணம் இல்லை எனவும், அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தாம் ஒரு போதும் கதைக்கவில்லை எனவும் கடந்த தினம் இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பிலே பாராளுமன்றத்தில் உரையாற்றியதாகவும் அமைச்சர் விஜேதாஸ ரராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அன்று தெரிவித்த விடயங்கள் 100 வீதம் உண்மையானவை எனவும் தனது அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனமான சட்டமா அதிபர் திணைக்களம் சரியான முறையில் செயற்பட்டிருந்தால் அதன் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டியது தமது பொறுப்பு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானவர்கள் மீது எதிர்க்கட்சியின் குற்றம் சுமத்துவது வழமையான விடயம் ஆனால் ஆளும் தரப்பினர் அவர்கள் மீது குற்றம் சுமத்துவது நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு எனவே அதற்கு இடமளிக்க முடியாது எனவும் தமது நிலைப்பாடு ஒரு போதும் மாறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சு எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்வதில்லை. அனைத்து விசாரணைகளையும் பொலிஸாரே முன்னெடுத்து வருகின்றது எனவே தாம் பதவி விலக வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்னும், கடந்த காலத்தில் 67 ஆயிரம் பேரை கொலை செய்த கொலைகாரர்களின் ஆலோசனைகளை நான் கேட்பதில்லை. தான் எந்தவொரு தவறையும் இழைக்காத காரணத்தினால் தாம் பதவி விலக வேண்டிய தேவை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களுக்கு கடந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நல்லவர். அவர் நாட்டை மீட்டெடுத்தவர் என்று கூறிய அமைச்சர் இன்று அவரை கைது செய்யுமாறு கோருகினறனர். அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாது செய்வதற்கு தலைமைத்துவத்தை கோத்தபாய வழங்கினார் அரசியல் பேதங்கள் எதுவும் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை பயங்கரவாதியாக சுட்டிக்காட்டுமாறு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய அரசியல்வாதிகளும் கோருகின்றனர். ஆனாலும் அதற்கு தான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய இந்த நாட்டுக்காகவே போராடினார். நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு எதிராக அவர் போராடவில்லை எனவே அவரை கைது செய்ய வேண்டிய தேவை இல்லை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.