(FASTGOSSIP | COLOMBO) – தென்னாபிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் புதிய வரலாற்றுச் சாதனையினை பதித்த இலங்கை அணியின் வீர்கள் இன்று(25) QR 656 இலக்க விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்துள்ளார்.
குறித்த வெற்றிக்கு பின்னர் தாயகம் திரும்பிய அணி வீரர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் அமோக வரவேற்பளித்து வரவேற்றுள்ளனர்.
இதன்போது, அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“அணி சார்பில் அண்மையில் நாம் தொடர் தோல்விகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.. என்றாலும் எம்மால் முடியும் என்ற நம்பிக்கை அணிக்கு இருந்தது.. நாம் 11 பேர் விளையாடுகிறோம்… வெளியான காணொளியில் தவறுகள் இருப்பதாக நாம் எண்ணவில்லை… சிலர் அதனை ஊதி பெரிதாக்கினர்.. நாம் ஒருபோதும் நினைக்கவில்லை…. அது வெளியாகும் என்று.. எமக்கு தெரியாமல் காணொளி பதிவாக்கப்பட்டுள்ளது…. குறித்த காணொளி பதிவு தொடர்பில் கிரிக்கெட் நிறுவனம் விசாரணைகளை முன்னெடுக்கும்… எவ்வாறாயினும் அது கவலைக்குரியதொன்று.. எமக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதனை நாம் ஏற்கிறோம்.. போட்டியில் வெற்றி பெற்றும் இவ்வாறானதொரு சம்பவத்திற்கு முகங் கொடுக்க நேர்ந்தமை கவலைக்குரியதே…” எனத் தெரிவித்துள்ளார்.







