ஆசியக் கிண்ண முதல் சுற்றுலேயே வெளியேறிய இலங்கை அணியானது நேற்று(19) தாயகம் திரும்பியிருந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த லசித் மாலிங்க;
“துக்கம்(தோல்வி) . எல்லோருக்கும் தெரியும் தோல்வியடைந்தோம் என்பது.. முடிந்தளவு பிழைகளை திருத்தி கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் அதுவே சிறந்தது..”
சுரங்க லக்மால் கருத்துத் தெரிவிக்கையில்;
“அணி எனும் வகையில் சிறப்பாக விளையாடினோம். தோல்வியடைந்தால் தான் எல்லாம் வெளியேறும்… போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் எமது பலவீனங்களை கண்டுகொள்ளாதே இருந்திருப்போம். எவரும் எதைப் பற்றியும் கூறுவதும் இல்லை.. எந்தவொரு அணிக்கும் இவ்வாறான நிலை ஒன்று தோன்றும்…ஒரு போட்டியில் தோல்வியுற்றால் எல்லா போட்டிகளிலும் தோல்வியடைவோம் என்பது அர்த்தம் கிடையாது. நாம் நாடு என்ற ரீதியில் சிந்திக்க வேண்டும்.”