தாய்மண்ணுக்கு திரும்பினார் பிரதமர்

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று(8) அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் பிரதமரின் அழைப்பையேற்று கடந்த 03ம் திகதி பிரதமர் ரணில் ஜப்பான் சென்றிருந்தார்.

பிரதமரின் இந்தக் குறித்த விஜயத்தின் போது ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் ஜப்பானின் மன்னர் உட்பட்ட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பாராளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.