பிரசவத்திற்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தையொன்றும் நேற்று(18) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனது மூன்றாவது பிரசவத்திற்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதியான மாத்தறை – கெகனதுவ – நாகுட்டிகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான பெண்ணொருவர் பிரசவத்திற்கு பின்னர் நேற்று(18) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவருக்கு பிறந்துள்ள குழந்தை தற்போது மாத்தறை பொது மருத்துவமனையின் குறை பிரசவ பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது முதலாவது பிரசவத்திற்காக அந்த மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயதான கரகொட – உயன்கொட – இஹலவிட்டியல பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு பெண்ணொருவர் கடந்த 12 ஆம் திகதி குழந்தை பிரசவித்துள்ளதுடன், திடீரென நோய் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையில் நேற்று(18) உயிரிழந்துள்ளார்.
இவருக்கு பிறந்துள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தங்காலை – நாகுலுகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான பெண்ணொருவருக்கு பிறந்த குழந்தை நேற்று(18) மாத்தறை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக மருத்துவனை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(rizmira)