தாய்லாந்தில் தொழிற்சாலை ஒன்றிற்குள் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் பாங்காக் நகரின் அருகே உள்ள தொழிற்பேட்டைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தே இன்று(30) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த தொழிலாளர்கள் அனைவரும் மியன்மாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.
குறித்த விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.