தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு…

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிக்குண்டவர்களில் 4 சிறுவர்களை பாதுகாப்பாக மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் 8 சிறுவர்களையும் அவர்களது பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

குகையிலுள்ள வௌ்ள நீரின் அளவு அதிகரிக்கும் அச்சம் நிலவுவதால், மீட்புப் படையினர் பயங்கரமான நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகைக்குள் சென்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் குகைக்குள் சிக்குண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் நேற்று வௌிநாடுகளைச் சேர்ந்த சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனையடுத்து, 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.