தாய்லாந்து படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

தாய்லாந்தில் படகு கவிழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்துள்ள நிலையில் இறந்தவர்கள் அனைவரும் சீனர்கள் என தெரியவந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தீவான புக்கெட் அருகே 105 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில், பலர் மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியானது

நேற்று(06) மாலை நிலவரப்படி, இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும். உயிரிழந்தவர்கள் அனைவரும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.