தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

நாட்டை அண்டிய வளிமண்டலத்தில் தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி இன்றும்(18) மத்திய , சப்ரகமுவ , ஊவா , மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

குறித்த பகுதிகளில் 100mm இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்பதோடு , குறித்த சந்தர்ப்பங்களில் மின்னலால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.