திங்கள் நள்ளிரவு முதல் புகையிரத பணிபுறக்கணிப்பு…

எதிர்வரும் திங்கட்கிழமை(30) நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தாமதமாகும் காரணமாக இந்த பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற் சங்கங்களின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.