திங்களன்று கொழும்பின் பிரதான 05 இடங்களில் குண்டு வெடிக்கும் சந்தேகம்.. – பொன்சேகா ஆருடம்…

(FASTGOSSIP – COLOMBO) – எதிர்வரும் 13ம் திகதியன்று, நாவலை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட 05 இடங்களில் குண்டு வெடிக்க திட்டம் ஈட்டியுள்ளதாக தன்னுடைய பாதுகாப்பு பிரிவினால் தனக்கு அறியப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையினை கடுமையாக விமர்சித்த அமைச்சர் பொன்சேகா, குறித்த தீவிரவாதத்தினை ஒழிக்க குறைந்தது 02 வருடங்கள் செல்லும் என தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் 13ம் திகதி கொழும்பின் பிரதான நகரங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சுற்றுலாதுறை அதிகார சபை இது குறித்த எச்சரிக்கை கடிதத்தை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு கடந்த 06ம் திகதி அனுப்பிவைக்கப்பட்டது.

இதன்படி நாவலை நகரம், தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை நகரம், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பஞ்சிகாவத்தை, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் இந்த குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறித்த கடிதம்;