திசர பெரேரா அவுஸ்திரேலியாவிலும் பந்து வீச்சில் அசத்தல்.. [VIDEO]

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஸ் லீக் கிரிக்கட் போட்டியில் எடிலைட் ஸ்ட்ரைகர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 6 ஓட்டங்களால் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி நேற்று வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்று கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய எடிலைட் ஸ்ட்ரைகர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 165 ஓட்டங்களையே பெற்றது.

மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் திஸர பெரேரா 25 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=b6RWHwWENbc” width=”560″ height=”315″]