திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸி அணியின் பிரபல அதிரடி வீரர் கிரிக்கட் வாழ்வுக்கு ஓய்வு…

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் பிரபல வீரர் பிரட் ஹொட்ஜ் அனைத்து வித சர்வதேச போட்டிகளிலும் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சத்திர சிகிச்சையை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக அவர் குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த தினத்தில் நிறைவடைந்த BBLபோட்டித் தொடரின் போது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது , அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி , பிரட் ஹொட்ஜ்க்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , அதனை தொடர்ந்து அவருக்கு இந்த அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக , அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெற தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இவர் , தற்போது ஐபிஎல் இல் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்காக எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரட் ஹொட்ஜ் 223 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 17,0084 ஓட்டங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma…