திட்டமிடப்பட்ட பஸ் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்நிறுத்தி, நாளை(12) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், நேற்று(10) பிற்பகல் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித குமார் தெரிவித்துள்ளார்.