(FASTNEWS | COLOMBO) – விக்கெட்களை 09 இனையும் இழந்த போது தானும் துடுப்பெடுத்தாட முகங்கொடுக்க வேண்டும் என தான் எண்ணியதாக தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட இசுறு உதான ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டியில் இலங்கை அணி சார்பில் 06*6 மற்றும் 04*7 உள்ளிட்ட 51 பந்துகளில் 78 ஓட்டங்களை கைப்பற்றியிருந்தார். விசேடமாக வேகப்பந்து வீச்சாளர்களது பந்து வீச்சுக்களையும் சமாளித்து இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் தான் கடந்த 05 மாத காலமாக அர்பணிப்புடன் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதன் பிரதி பலனே இதுவென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய(13) போட்டியில் எனது திட்டமாக இருந்தது, தான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதே ஆகும். என்றாலும் 09 விக்கெட்களை இழந்த நிலையில் அணியினை ஓரளவு திடமாக வைத்திருக்க வாய்ப்புக் கிட்டியமை எனக்கு கிடைத்த வாய்ப்பாகும்.