கண் புருவங்களை வளர வைக்க நீங்கள் அதிக நேரமோ அல்லது அதிக செலவோ செய்ய தேவையில்லை.. ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரம் தான் இதனை பராமரிக்க தேவைப்படும். இந்த பகுதியில் கண் புருவங்களை வளர செய்யும் இயற்கையான வழிகள் பற்றி காணலாம்.
விளக்கெண்ணை:
விளக்கெண்ணெயை சிறிது சூடேற்றி, அதனைக் கொண்டு புருவங்களை தினமும் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் இரவில் புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மெல்லிய துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனை செய்து வந்தால் அடர்த்தியான புருவத்தை பெறலாம்.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயிலில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ஆலிவ் எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, இரவில் படுக்கும் போது தினமும் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
கற்றாழை:
கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தாலும், புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.
தேங்காய் பால்:
தேங்காய் பாலும் புருவங்களின் வளர்ச்சியையும், அதன் அடர்த்தியையும் அதிகரிக்கும். அதற்கு தேங்காய் பாலை புருவங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
முட்டை:
முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், அதுவும் புருவங்களின் அடர்த்தி மற்றும் கருமையை அதிகரிக்கும்.