தினமும் வரி நிவாரணங்களை வழங்க முடியாது…

(FASTNEWS |COLOMBO)- வியாபாரிகளுக்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் வரி நிவாரணங்களை வழங்க முடியாது என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் சபை முதல்வர் தெரிவிக்கையில்;
“வரி நிவாரணங்களை தினமும் வழங்க முடியாது. குறுகிய காலத்திற்கு வழங்குவோம். அதினூடாக வியாபாரத்தினை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இன்றேல் அரசுக்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். புதிய வியாபாரங்களை தெரிவு செய்து வரி நிவாரணங்களை வழங்க நேரிடும்.” என தொடர்ந்தும் தெரிவித்திருதார்.