தினேஷ் ஷந்திமாலுக்கு பதிலாக அணியில் சந்துன் வீரகொடி…

இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(07) கேப் டவுனில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஷ் ஷந்திமாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக சந்துன் வீரகொடி அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரையில் இடம்பெற்றுள்ள 3 போட்டிகளிலும் தொன்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியுடனான இந்த தொடரை 5-0 என்ற வகையில் முற்றாக கைப்பற்றுவோம் என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏ.பி டிவில்லியர்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.