திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக்…

(FASTGOSSIP|PHILIPPINES)பிலிப்பைன்ஸ் கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து 40 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டேவோ நகரில் கிழக்குப் பகுதியில் இருந்து ‘வாத்து மூக்கி திமிலங்கலம்’ ஒன்றை டி போன் கலெக்டர் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

திமிங்கலத்தின் வயிற்றில் 16 அரிசி பைகளும், பல ஷாப்பிங் பைகளும் இருந்துள்ளதாகவும், “இதுவரை ஒரு திமிங்கலத்தின் உடலில் இத்தனை பிளாஸ்டிக்கை கண்டதில்லை” என்று அந்த அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

பெருங்கடல்களில் சேரும் 60 சதவிகித பிளாஸ்டிக், சீனா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளில் இருந்து வருவதாக, 2015ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் குறித்து பிரசாரம் செய்யும் பெருங்கடல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மெக்கென்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.


Image may contain: food



Image may contain: one or more people, people sitting and food