பேரூந்து வெடிப்புச் சம்பவம் – 5 பேர் கொண்ட குழு நியமனம்…

தியத்தலாவ – கஹகொல்ல பிரதேசத்தில், பேரூந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு 5 பேர் கொண்ட குழுவொன்றை இராணுவத் தளபதி நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரூந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தம்வசம் வைத்திருந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என அரச பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில், தியத்தலாவ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இராணுவ சிப்பாய்களைத் தவிர ஏனைய 17 பேரிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , குறித்த சம்பவம் தொடர்பில் பரவிச் செல்லும் சில வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.