தியத்தலாவ, கஹகொல்ல பகுதியில் அண்மையில் பேரூந்தில் ஏற்பட்ட கைக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவக் குழுவின் அறிக்கை இராணுவ சட்டப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பிரதான தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ருக்மால் டயஸ் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை இராணுவ தலைமையகத்திற்கு ஒப்படைத்ததன் பின்னர் இராணுவ சட்டப் பிரிவிடம் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த 21 ஆம் திகதி தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பேரூந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma