திராட்சையை இந்த பொருட்களுடன் கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றம்…

நீங்கள் முகத்திற்கு ஏராளமான பொருட்களை உபயோகப்படுத்தியிருப்பீர்கள் ஆனால் என்றாவது திராட்சையை உங்களது முகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறீர்களா?

எனவே இந்த திராட்சையை பயன்படுத்தினால், நீங்கள் அழகான மற்றும் ஜொலிக்கும் சருமத்தை பெறுவதோடு மட்டுமின்றி, உங்களது சருமத்தினை சுருக்கங்கள், கரும்புள்ளிகள், கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கலாம்.

திராட்சை மற்றும் யோகார்ட்:
இரண்டு மூன்று கருப்பு திராட்சைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் யோகார்ட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளுங்கள். இதனை நன்றாக கலந்து கழுத்து மற்றும் முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த மாஸ்க்கை தினசரி உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானிமெட்டி:
சில திராட்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை ஸ்மூத்தான பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் ஆகிவற்றை கலந்து முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து இதனை ரிமூவ் செய்து விடுங்கள். இதனால் உங்களது முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

கேரட் மற்றும் திராட்சை:
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு திராட்சை பேஸ்ட், க்ரீம், அரிசி மாவு மற்றும் கேரட் சாறு போன்றவற்றை எடுத்து அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதனை முகத்திற்கு மற்றும் கழுத்துக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவுங்கள். இது உங்களது முகத்தை இறுக செய்யும். சருமத்தில் உள்ள துளைகளை நீங்கும்.

தேன் மற்றும் திராட்சை:
தேன் மற்றும் திராட்சையை எடுத்து நன்றாக குழைத்து ஸ்மூத் பேஸ்ட்டாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளுகள். இது உங்களது முகத்தை பளிச்சென்று மாற்றும்.

பப்பாளி:
திராட்சை மற்றும் பப்பாளியை ஒன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

பேக்கிங் சோடா:
சிறிதளவு பேக்கிங் சோடா, சிறதளவு கோதுமை மாவு மற்றும் சிறிதளவு திராட்சை போன்றவற்றை ஒன்றாக கலந்து உங்களது முகத்திற்கு பேக் போல போடுங்கள். இது உங்களது முகத்தின் அழகை மெருகேற்றும்.