ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட, தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மக்களின் மரபுரிமையான திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக்கும் தேசிய நிகழ்வு கடந்த 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாத்தளை அலுவிகாரையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.