திருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேசத்தில் யுத்த ஆயுதங்கள் சில இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதி வெடிகள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.