திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு துரித நடவடிக்கை…

கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆகியவற்றுக்கு அப்பால் திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று(23) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பணிகளுக்காக சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகள் உதவி செய்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்த 10 வருடங்களில் வங்காள விரிகுடா கரையோர நாடுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், அதன் மூலம் திருகோணமலைத் துறைமுகமும் அபிவிருத்தியடையும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பு இடம்பெறும் என்றும் பிரதமர் ரணில்விகிரமசிங்க தெரிவித்துள்ளார்.