திருத்தப்பட்ட வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு.

அமைச்­ச­ர­வையின் முழு அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்ள திருத்­தப்­பட்ட வற்­வரி அதிகரிப்பு சட்­ட­மூலம் நாளைய தினம்(03) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால்  நாடாளுமன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி திருத்­த­பட்ட வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் அமைச்சரவைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

11% – 15% வீத­மாக வற்­வ­ரியை அதி­க­ரிக்கும் நோக்கில் வற்­வரி சட்­ட­மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஏலவே, வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் கடந்த மே மாதம் 2 ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வந்­தது. எனினும் தேசிய சுதந்­திர முன்­னணி உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வற்­வரி சட்­ட­மூலம் உரிய அர­சியல் அமைப்பு தேவைகளை பூர்த்தி செய்­ய­வில்லை என உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

இந்­நி­லை­யி­லேயே அர­சாங்கம் உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி புதிய வற்வரி சட்டமூலத்தை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றதுடன் தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.