அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை(24) காலை 08.00 மணி முதல் மறுநாள்(25) அதிகாலை 02.00 மணி வரை 18 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவல மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும்,மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், இரத்மலானை சொய்சாபுர பிரதேசத்திலும் குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என குறித்த சபை அறிவித்துள்ளது.