திருமணத்துக்கு அவசரமில்லை – காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் பிசி­யாக நடிக்­கிறார். தனு­சுடன் ‘மாரி’ படத்­திலும் விஷா­லுடன் ‘பாயும் புலி’ படத்­திலும் நடிக்­கிறார்.

இந்தி பட மொன்­றிலும் ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார்.

காஜல் அகர்­வா­லுக்கு திரு­மண ஏற்­பா­டுகள் நடப்­ப­தா­கவும் செய்­திகள் பரவி உள்­ளன. தொழில் அதிபர் ஒரு­வரை நிச்­சயம் செய்­துள்­ள­தா­கவும் கூறப்­பட்­டது. இதனை காஜல் அகர்வால் மறுத்தார்.

இது தொடர்­பாக அவர் கூறு­கையில், “நான் திரு­ம­ணத்­துக்கு அவ­ச­ரப்­ப­ட­மாட்டேன். இப்­போ­தைக்கு என் திரு­மணம் நடக்­காது. அதற்கு நிறைய காலம் உள்­ளது. ஒவ்­வொரு விஷ­யமும் அதற்­கு­ரிய நேரத்தில் நடக்க வேண்டும்.

அது போல் என் திரு­ம­ணமும் அதற்­கான நேரம் வரும் போது நடக்கும்.

சினி­மாவில் பெயர் சம்­பா­திக்­கவும், பணம் சம்­பா­திக்­க­வும் தான் நடித்துக் கொண்டு இருக்­கிறேன்.

என் முடி­வு­களை நானே சுய­மாக எடுக்­கிறேன்.

பெரும்­பா­லான வீடு­களில் பெண்கள் அவர்­களின் அம்­மாக்­க­ளிடம் ஆலோ­சனை கேட்டு அதன்­படி நடக்­கி­றார்கள்.

நான் அப்­படி இல்லை. என் தாயை தொந்தரவு செய்ய மாட்டேன். நானே சொந்தமாக முடிவுகள் எடுக்கிறேன்” என்றார்.