திருமணத்திற்கு முன்னர் H.I.V பரிசோதனை கட்டாயம்

(FASTNEWS|COLOMBO) – கோவா மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானே தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.