(FASTNEWS|COLOMBO) பிரபல நடிகை எமி ஜாக்சன் தனக்கு குழந்தை பிறக்கப்போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மதராச பட்டிணம் படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன் ஐ, தெறி, 2.0 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து முன்னனி நடிகையாகவுள்ளார்.
எமி ஜாக்சன், ஜார்ஜ் பனாயிட்டோ என்ற பெரிய தொழிலதிபரை காதலித்து வந்தார். டேட்டிங் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆங்கில புத்தாண்டு நாளான்று இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப் படுத்தி உள்ளார்.
தனது காதலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர் “கூரை மீது ஏறி சத்தமாக சொல்ல வேண்டும் என்று காத்திருக்கின்றேன். அன்னையர் தினமான இன்று சொல்வது தான் பொருத்தமான ஒன்று.. இந்த உலகத்தில் உன்னை விட வேறு யாரையும் நான் இந்த அளவிற்கு நேசிக்கவில்லை.. நமது குட்டி லிப்ராவை பார்க்க நாம் காத்திருக்க முடியாது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

