(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு அடி உயரமே கொண்ட புர்ஹான் சிஷ்டி என்பவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பல்வேறு தொழில்களை தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கும் போபோ, தனது உடல் குறைபாட்டையும் தாண்டி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். போபோவின் ரசிகர்கள் சுமார் 13 நாடுகளில் இருந்து இவ்விழாவுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.