திருமண பந்தத்தில் இணையவுள்ளாரா நம்ம சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்க…

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அரசியலிலும், திரையிலும் ஜொலிக்கும் ஒரு சுப்பர் ஸ்டார் என்றே கூற வேண்டும்.

அண்மையில் சில நாட்களாக ரஞ்சன் ராமநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தை அழகுபடுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் திருமண பந்தமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

எனினும் குறித்த இந்த விடயத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய நேரடியாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

அதன் போது பிரதியமைச்சர் இருக்கிற இடத்தை அழகாக வைத்துக் கொள்வது நல்லது தானே என்று நக்கலாக தெரிவித்துள்ளதுடன், ஆனால் இதற்கு தனது சொந்தப்பணத்தில் செலவு செய்து வருவதாகவும், திருமணம் முடித்து குழந்தைகள் பெற்றவர்கள் தமது குழந்தைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு படும்பாட்டைப் பார்த்தால் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகின்றது என்று கூறியுள்ளார்.

இதற்கு இல்லை அப்படியாயின் நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருப்பதாக சிங்கள ஊடகம் மேற்கோற்காட்டி தெரிவித்துள்ளது.

எனினும் பல முக்கிய கலைஞர்கள் தனது வீட்டிற்கு வரும்போது இலங்கை சூப்பர் ஸ்டார் ஒருவரின் வீடு இவ்வாறாக இருக்கும் என்றும் எண்ணுவதால் தனது வீட்டினை புதுப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வீட்டிற்கு பல உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வருகை தருவதால் தனது சொந்த செலவில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டினை புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.