நீதியமைச்சரும் கலாதியுமான விஜயதாஸ ராஜபக்ஷவின் மகனும், பாதுகாப்பு அமைச்சின் ஊடகச் செயலாளருமான ரகித ராஜபக்ஷவினது திருமணமானது கடந்த 09ம் திகதி இடம்பெற்றது.
ரகிதவின் துணைவி லங்கா அதிகாரி என்பவராவார்.
திருமண சாட்சியாளராக மணமகன் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் மணமகள் சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் கையொப்பமிட்டனர்.
கொழும்பு, சினமன் கிரேட் ஹோட்டலில் வெகு கோலாகலமாக நடைபெற்ற திருமண வைபவத்திற்கு அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த வைபவத்தின் மறக்கமுடியா புகைப்படங்கள் எமது வாசகர் கண்ணோட்டத்திற்கு..
