திருமண வாழ்க்கைக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையை நிர்ணயிக்கும் போட்டி நாளை..

இந்திய அணித் தலைவர் கோஹ்லிக்கு நாளை(05) திருமணத்திற்கு பின் முதலாது போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதனடிப்படையில் இந்தியா அணியின் தலைவர் விராட் கோஹ்லி இத்தாலியில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆதலால், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வு பெற்றிருந்தார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் விராட் கோஹ்லியின் முதலாவது போட்டி என்பதால் பலராலும் எதிர்பார்க்கப்படும் போட்டியாகவும் அமைந்துள்ளது.

மேலும் கோஹ்லியின் திருமண வாழ்க்கைக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கை எவ்வாறு அமைய போகின்றது என்பதை தீர்மானிக்கும் போட்டியாக நாளைய தென்னாபிரிக்காவுடனான போட்டி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#reeshma