திருகோணமலையில் படகொன்றில் மனித சடலங்கள் சில மிதப்பதாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக காவற்துறையினரும், கடற்படையினரும் உள்ளடங்கிய குழுவினர் இரண்டு படகுகளில் அங்கு சென்றுள்ளனர்.
முன்னதாக வெளியான தகவல்களின் படி, ஐந்து மனித சடலங்கள் குறித்த படகில் மிதப்பதாகவும், அவற்றில் 2 பெண்களின் சடலங்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.