எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் ஆபாசமாக உடை அணிந்த வந்த நடிகை ரானியா யூசெப் மீது கெய்ரோ நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விழாவில் அந்த நாட்டின் நடிகை ரானியா யூசெப், தொடை தெரிகிற அளவுக்கு ஆபாசமாக மெல்லிய உடை அணிந்து வந்து கலந்துகொண்டது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் மீது 2 வக்கீல்கள் கெய்ரோ நீதிமன்றில் வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கில் நடிகை ரானியா யூசெப் ஆபாச உடை அணிந்து வந்தது பாலுணர்வை தூண்டுவதாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, தான் அவ்வாறு உடை அணிந்துக்கொண்டு வந்து, திரைப்பட விழாவில் தோன்றியதற்காக நடிகை ரானியா யூசெப் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இது பெருத்த கோபத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என நான் உணரவில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து சமூகத்தின் மதிப்பினைக் காக்க நான் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.