மூடப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளம் இன்று புதன்கிழமை (03) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இந்த ஆர்ப்பாட்டம் விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் 11 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 22ஆம் திகதி, பல்கலைக்கழக மாணவர்களின் உடமைகள் சிலவற்றை நீக்குவதற்கு பல்கலைக்கழக பணியாளர்கள் முயற்சி செய்ததையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலையை அடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.